மரண அறிவித்தல்: அமரர் திரு இந்திரலிங்கம் பிரசாந்த்

தோற்றம்: 29.10.1995 மறைவு: 19.03.2026
திரு இந்திரலிங்கம் யோகராணி தம்பதிகளின் தலைமகன் பிரசாந்த் இந்திரலிங்கம் அவர்கள் 19/03/2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணமடைந்துள்ளார்.
அன்னார் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இந்திரலிங்கம் யோகராணி தம்பதிகளின் அன்பான மூத்தமகனும்,வினோவின் அன்புக் கணவரும்,பிரதாப் ,பிரவீனின் பாசமிகு அருமை அண்ணாவும், காலஞ்சென்ற திரு திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா, காந்திமதி அம்மா, காலஞ்சென்ற திரு திருமதி ராசகிளி அம்மன்கிளி ஆகியோரின் பேரனும்,
திரு திருமதி பிறேம்ராஜ் விமலாவதி அவர்களின் இளையமருமகனும்,
ரவீந்திரன் வனிதாமலர், கிரகேந்திரன் புஷ்பா, சசீந்திரன் புவனேஸ்வரி, கஜேந்திரன், கமலினி, ஜீவேந்திரன் ஜமுனாராணி, சகலேந்திரன் தர்சினி, தனேந்திரன் வதனி, தபேந்திரன் விஜி , பிருதிவிராஜா கெங்காதேவி , ரெத்தினசிங்கம், ரதிதேவி குமரகுரு , காலம்சென்ற சிவமணி, காலம்சென்ற சிவானந்தவேல் , வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தவராசா, ஜெயராணி, நிமலானந்தராஜா சாந்தராணி, பிறேம்குமார் கமலவேணி, உதயகுமார் சுகுண, வேதவனம் ரஞ்சினிதேவி, ராசகுலசிங்கம் சரோஜனிதேவி ஆகியோரின் பெறாமகனும்
பாலகிருஷ்ணன், தயாநிதி, கிருஷ்ணகுமார், புனிதவதி , கமலகுமாரி ராஜகுமார், தயாளகுமாரி, ஶ்ரீகுமார் ஆகியோரின் அன்பு மச்சானும், சோபனா, கல்பனா, உஷாசதீஸ், வர்ணன், கரிகாலன், பிரியதர்சினி, ரேவதி, சஜீவதி, கரிகரன், ஜனனி, மாதுளன், ஜெனிஷா, பாவனா, லவன், ஜீவியா, அபிநயா, அஸ்வின், பானு, மிதுலன், அசோக், பிரசன், சரவணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ், பாலன், சரண், மயூரன், மயூரி, மாதுரி, ரவீனா, சுவர்னா, கர்ணன், பிரியா, தீபன்,சிந்து செந்தமிழன், ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
டினேஷ்,திரிஷா, ரக்ஷனா, மதுமிதா, அபிநயா, பிரபாகரன், லூக்கா, இனிஷா, ரிஷிகா, ரியாசன், தமிழரசன், கபீனா, கபிலன், இனியா, ஆதிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜய், வினோத், வர்சினி, ரோசினி, வாசினி, வினுசன், சந்தியா, கிஷோர், சுவேதா, துர்க்கா, துவாரகா, கரிகரன், கலையரசி, அஜய், ஹாசினி பவித்திரன், விதுரன் ரிசி, இசானி, ஐசனா, ஹரிஸ், ராம், ரம்மியா , ரோசியா, அக்சயன் ஆகியோரின் ஆசைச் சித்தப்பாவும்,
சசிரேணு, ரஜிதா, ராமச்சந்திரன், ஜெயசிங்கம், தனபாலன், தாயுமானவர் , நொயலா , சந்திரிகா ஆகியோரின் அன்புத் தம்பியும்,
பாலேஸ்வரன், விஜயகுமார், கோகுலன், ஆகியோரின் அன்புச் சகலனும்
மற்றும் ஆருயிர் நண்பர்களின் தலைவனும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்:
1/4/2026 புதன்கிழமை காலை 8:00 மணிமுதல் மதியம்11:00 மணிவரையும்
அதன்பின்னர் ஈமச்சடங்குகளும்பிரம்டனில் உள்ள 30 Bramwin Ct, Brampton on, L6T 5G2 இல்
அமைந்துள்ள மயானத்தில் பிரம்டன் பீல் காவல்துறை அதிகாரிகளின் சார்பில் அமரர் பிரசாந்த் இந்திரலிங்கம் அவர்களுக்கான காவல்துறை உத்தியோக சேவையின் தியாகத்தைப் போற்றும் வகையில் மிக உயரிய மரியாதையும், மற்றும் அன்னாரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளும் நடைபெற்று அதே முகவரியிலேயே உள்ள மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் குடும்பத்தினர்தொடர்புகளிற்கு:
பிரதாப் : 514 346 0622
இந்திரலிங்கம் :514 996 3564
பிரவீன் : 514 431 1350
பிறேம்ராஜ் : 514 298 3358
துரை : 647 729 1182
